ADVERTISEMENT

“நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்” - சீமான் எச்சரிக்கை

08:00 AM Jun 21, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

“பாஜகவினர் தமிழ்நாட்டில் அதிகப்படியாக தமிழ், செங்கோல் என்றெல்லாம் பேசுகிறார்கள். நாம் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். ஏதோ ஒன்று நடக்கப் போகிறது” என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மணிப்பூரில் சட்டத்தின் ஆட்சி நடக்கும் என்றார்கள். அவ்ளோதான் முடிந்தது. நடக்கிறது பாருங்கள் சட்டத்தின் ஆட்சி. இங்கு அதிகப்படியாக தமிழ், செங்கோல் என்றெல்லாம் பேசுகிறார்கள். நாம் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. சீமான் பாட்டன் ராஜ ராஜ சோழன் என்கிறார். செங்கோலை தூக்கு எனத் தூக்கியுள்ளனர். செங்கோல் எங்கள் பாட்டன் கையில் வைத்திருந்ததா. உம்மிடி பங்காருவில் வைத்திருந்தது தானே. அதையேன் ராஜ ராஜ சோழனுடையது என்கிறீர்கள்.

சட்டத்தின் ஆட்சி நடைபெறும், சட்டமே எங்கள் வேதப்புத்தகம் என்றீர்கள். அந்த சட்ட சாசனத்தை அங்கு வைத்திருந்தீர்கள் என்றால் கேள்விகளே வராது. உயர்சாதி மக்களை பழங்குடி மக்களாக பட்டியலில் சேர்த்து பழங்குடி மக்களின் இட ஒதுக்கீட்டை பறிக்கும் போது கொந்தளிக்கிறார்கள். பொருளாதாரம் இன்று வரும், நாளை சென்றுவிடும். ஆனால் எவ்வளவு நாள் ஆனாலும் என் மீது பூசப்பட்ட சாதிய இழிவு மாறுமா. இளையராஜா போல் இசைமேதை உலகில் உண்டா? ஆனால் தலித்துக்கு சீட் கொடுத்தோம் என ராஜ்யசபாவில் சொல்கிறார்கள். அப்போ தகுதி பார்த்து கொடுக்கவில்லை. தலித் என்பதற்காக கொடுத்துள்ளீர்கள். என் மீது சுமத்தப்பட்ட இழிவு இன்னும் போகவில்லை.

மணிப்பூர் கலவரத்தில் அறுவடை செய்யப்போவது மோடி தான். அடுத்த தேர்தல் வந்தால் அவர் தான் வெல்வார். பாதிக்கப்படும் என்றால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாதா. பின் ராணுவம் எதற்கு? காவல்துறை எதற்கு? பிரிவினைவாதம் என்பதே பாஜகவின் கொள்கை தான். அதனால் பாஜகவை மானுட குலத்தின் எதிரி என நாங்கள் சொல்கிறோம். பிணத்தின் மீது பிரச்சார மேடையைப் போட்டுப் பேசும்.

என்னுடைய மறு உருவம் பாஜக என்று வேண்டுமானால் சொல்லுங்கள். நான் ஏற்கிறேன். நான் முருகனை கும்பிட்டால் பாஜகவும் கும்பிடும். நான் வேலுநாச்சியாரை பேசினால் பாஜகவும் பேசும். நான் ஈழம் என்றால் பாஜகவும் பேசிப் பார்க்கும். நான் ராஜ ராஜ சோழனைப் பேசினால் பாஜகவும் பேசும். நான் தமிழ்ப்பாட்டன் என்றால் பாஜக இந்து மன்னன் என்று சொல்லும். அப்போது இந்து என்ற சொல்லே இல்லை. தமிழில் இந்து என்ற சொல் நிலவைத்தான் குறிக்கிறது” என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT