ADVERTISEMENT

சசிகலா விடுதலையாகிறார்?அரசியலில் பரபரப்பு!

11:15 AM Jun 11, 2019 | Anonymous (not verified)

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியை யார் தலைமை ஏற்று நடத்த போகிறார்கள் என்று இருந்த நிலையில் அதிமுகவின் பொது செயலாளராக சசிகலாவை அக்கட்சியினர் தேர்ந்தெடுத்தனர்.பின்பு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா,சசிகலா,இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருட சிறையில் தண்டனை வழங்கியது.இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ருபாய் அபராதமும்,மீதமுள்ள 3 பேருக்கு 10 கோடி ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நிலை குறைவால் மறைந்து விட்டார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


பின்பு 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.இதனையடுத்து இந்த மூவரும் பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள், சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் சசிகலாவை விடுவிப்பது தொடர்பாக கர்நாடக அரசுக்கு சிறைத்துறை அதிகாரிகள் கடிதம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.இதனால் தண்டனை காலம் முடிவதற்குள் சசிகலா விடுதலை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT