ADVERTISEMENT

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

04:09 PM Apr 18, 2019 | rajavel

ADVERTISEMENT

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கட்சி திட்டமிட்டிருப்பதாகவும், தேர்தல் ஆணையம் இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நியாயமான வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளார்.

ADVERTISEMENT



அந்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு துவங்கிய காலை முதலே, வாக்காளர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளமாக வாக்களித்து வருவதை பொறுத்துக்கொள்ளள முடியாத ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மாலை 3 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை வாக்குச்சாவடி கைப்பற்றிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பினை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும், வாக்கு சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) அந்த நேரத்தில் செயலிழக்கச் செய்யப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இதன் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும், நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். திமுகவின் இந்த புகார் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT