திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக வேலுச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அதை தொடர்ந்த திமுக வேட்பாளர் வேலுச்சாமி திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வினையிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்குதலின் போது கழகத் துணை பொதுச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி, திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமானசக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒட்டன்சத்திரம் சக்திவேல் கவுண்டர் மதிமுக மாவட்டச் செயலாளர் செல்வராகவன், கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த கருப்புச்சாமி, நா.சச்சிதானந்தன், கொங்கு கட்சியைச் சேர்ந்த அருள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட சில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 I.Periyasami  Interview

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியோ..

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியைபொருத்தவரை மாம்பழம் அழுகிவிட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தில் விழக்கூடிய ஓட்டுகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சி இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும். திமுக கடந்த ஆட்சியின் போது திண்டுக்கலில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இதுவரை மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் நடைபெறவில்லை.

 I.Periyasami  Interview

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மருத்துவ கல்லூரி கொண்டு வரப்படும் என செய்தியாளர் தெரிவித்தார்.

 I.Periyasami  Interview

இதற்கு முன்னதாக அதிமுக கூட்டணி கட்சியை சேர்ந்த பாமக வேட்பாளர் ஜோதி முத்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இப்படி பாமக வேட்பாளர் ஜோதிமுத்தூ வேட்புமனு தாக்குதலின்போது மாவட்ட செயலாளர் மருதராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் மட்டுமே வந்து இருந்தனர். ஆனால் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வேட்புமனு தாக்கலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.