சென்னையில் வரும் 23 ஆம் தேதி திங்கள் கிழமை திமுக சார்பில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு பேரணி நடைபெற இருப்பதைஅடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் திரைத்துறையினருக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

ban DMK rally ... Hindu People's Party complains to police

இந்நிலையில் இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி நடைபெறுவதற்கு முன்பே திமுக தலைவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும். வன்முறை மூலம் உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்தவேஇந்த பேரணியை திமுக நடத்த திட்டமிட்டுள்ளது என காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் ரஜினியின் டுவிட்டர்பதிவை கிண்டல் செய்த உதயநிதி ஸ்டாலினையும் கைது செய்யவேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.