ADVERTISEMENT

சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்... இன்று கீழே இருக்கும், நாளை மேலே வரும்... சட்டசபையில் ஈ.பி.எஸ்.

02:36 PM Jul 20, 2019 | rajavel



ADVERTISEMENT

சட்டசபையில் வெள்ளிக்கிழமை காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தி.மு.க. உறுப்பினர் க.பொன்முடி பேசியபோது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

ADVERTISEMENT

பொன்முடி:- முடிவு எடுப்பதில் தமிழக மக்கள் சிறந்தவர்கள் என்று கடந்த ஆண்டு பதிலுரையில் முதல்- அமைச்சர் தெரிவித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 37 இடங்களில் வெற்றியையும், இடைத்தேர்தலில் 22-ல் 13 இடங்களில் வெற்றியையும் மக்கள் அளித்திருக்கிறார்கள்.



எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்? நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை எல்லாம் வாக்குறுதிகளாக அளித்து வெற்றி பெற்றீர்கள்.

மு.க.ஸ்டாலின்:- என்னென்ன வாக்குறுதிகளை அளித்தோமோ ஆட்சிக்கு வந்ததும் அதை நிச்சயம் நிறைவேற்றுவோம். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம்.

எடப்பாடி பழனிசாமி:- நாங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது உண்மை சொல்லி ஓட்டுகேட்டோம். பொதுமக்கள் 9 இடங்களில் வெற்றியை தந்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றோம். எனவே, சக்கரம் என்பது சுழன்று கொண்டே இருக்கும். இன்று கீழே இருக்கும், நாளை மேலே வரும். மீண்டும் 2021-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.


மு.க.ஸ்டாலின்:- 22 இடங்களில் 13 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 12 தொகுதிகள் உங்களிடத்தில் இருந்ததை நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். எங்களுடைய வளர்ச்சியைத்தான் இது காட்டுகிறது.
எடப்பாடி பழனிசாமி:- நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் தனித்தனியாக நடந்திருந்தால் எங்கள் பலத்தை நிரூபித்து காட்டியிருப்போம். இவ்வாறு விவாதம் நடந்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT