ADVERTISEMENT

சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்!

12:50 PM Jun 17, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவை மீட்க மீண்டும் தான் வர இருப்பதாகவும், தொண்டர்கள் பயப்பட வேண்டாம் எனவும் தொடர்ந்து சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகியிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் பேசிய அதிமுகவினர் 15 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதேபோல் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தியும் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல், விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கு நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ''ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இருக்க தகுதி இல்லாதவர்'' என தீர்மானத்தை வாசித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT