ADVERTISEMENT

வயநாட்டில் இடதுசாரிகளை தோற்கடிக்க முடியுமா என்று ராகுல் சோதித்து பார்க்கிறாரா?  - பினராயி விஜயன் ஆவேசம்

06:59 AM Apr 01, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியுடன் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதனால், கேரளாவில் ஆட்சி நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் கொந்தளித்துள்ளார்.

ADVERTISEMENT


அவர், ‘’காங்கிரஸ் தலைவர் கேரளாவில் போட்டியிடுவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இல்லை. காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களில் அவரும் ஒருவர். பா.ஜனதாவுடன்தான் காங்கிரசுக்கு போட்டி என்றால், பா.ஜனதாவுடன்தான் ராகுல் காந்தி மோதி இருக்க வேண்டும். கேரளாவில், இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி.

ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதை இடதுசாரிகளுக்கு எதிரான போட்டியாகவே பார்க்க வேண்டும். ஆனால், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். ராகுல் காந்தியை தோற்கடிக்க பாடுபடுவோம். தேர்தலுக்கு பிறகு, அமேதி தொகுதியை தக்க வைத்துக்கொள்வேன் என்று ராகுல் காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். அப்படியானால், வயநாட்டில் இடதுசாரிகளை தோற்கடிக்க முடியுமா என்று அவர் சோதித்து பார்க்கிறாரா? மக்களுக்கு இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது, காங்கிரஸ்?’’என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT