ADVERTISEMENT

'புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில் தேர்தலைச் சந்திக்க வேண்டும்'- மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தல்!

08:52 PM Mar 05, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ரங்கசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சந்திரமோகன் நேரில் சந்தித்து கூட்டணித் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்றது. அப்போது கட்சியின் மாநில பொறுப்பாளர்களுடன் பேசிய மு.க.ஸ்டாலின், "புதுச்சேரியில் கூட்டணியின்றி தி.மு.க.வினரால் வெற்றி பெற முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார். அதற்குக் கட்சியின் பொறுப்பாளர்கள், புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில் தேர்தலைச் சந்திக்க வேண்டும். புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் 18 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, மற்ற தொகுதிகளைக் கூட்டணிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT