ADVERTISEMENT

மோடி-சீன அதிபர் வருகையையொட்டி படகு பேரணியில் பொன்.ராதாகிருஷ்ணன்

10:08 AM Oct 11, 2019 | rajavel



பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதற்காக சென்னை வரும் இருவரையும் வரவேற்கும் விதமாக பாஜகவின் மாநில மீனவர் அணி சார்பில் சென்னை பாலவாக்கம் பல்கலைநகர் கடற்கரையில் இருந்து கடல் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தேசிய ஒற்றுமை கடல்வழி படகு பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT




இந்த பேரணியை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பொன்.ராதாகிருஷ்ணனும் படகு பேரணியில் பங்கேற்றார். சுமார் 90 படகுகளில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சென்றனர்.

ADVERTISEMENT



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், மாமல்லபுரம் வரும் இரு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது. கடல் கடந்து சீனா சென்று தொடர்பு வைத்திருந்த நம் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த படகு பேரணி நடத்தப்பட்டது என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT