ADVERTISEMENT

சிரமமே இல்லாமல் தோற்கடிக்கக்கூடிய நான்கு தொகுதிகள்...

01:31 PM Apr 08, 2019 | rajavel

ADVERTISEMENT

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து பழ.கருப்பையா பிரச்சாரம் செய்தார்.

ADVERTISEMENT

அப்போது, ''இனிமேலும் யாரோடும் கூட்டும் இல்லை, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று சொன்னவர் இப்போது ஒரு திராவிட கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார். ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு சொன்னார்கள் அதிமுகவினர் 70 ஆயிரம் கோடியை கொள்ளையடித்துவிட்டார்கள். எதில் எதில் கொள்ளையடித்தார்கள், எப்படி எப்படி கொள்ளையடித்தார்கள் என்று நேரடியாக ஆளுநரை பார்த்து ஒரு புள்ளி விவரப்பட்டியலை கொடுத்தார். இவ்வளவு பகிரங்கமாக கொள்ளையடிக்கின்ற இவர்களின் ஆட்சி நீடிக்க வேண்டுமா? இவர்களது ஆட்சி இறக்கப்பட வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்தார். ஆறு மாதம் கழித்து அதே அதிமுகவில் கூட்டு சேர்ந்திருக்கிறார்.



அவர்கள் 7 + 1 + ... அது சொல்லப்படவில்லை. 7 என்பது நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கான இடம். 1 என்பது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கான இடம். 7 + 1 என்பது சரி. அதற்கு பிறகு சொல்லாமல் விடப்பட்ட அந்த ரகசியம் 500 கோடி. 7 + 1 + 500 கோடி என்று பேரம் பேசி இந்த தேர்தலில் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

இப்போது எடப்பாடி பழனிசாமி என்ன நினைத்திருப்பார், 70 ஆயிரம் கோடியை கொள்ளையடித்ததாக சொன்னீர்களே, ஒரு நாள் நீங்களும் என்னிடம் வந்து 500 கோடி கேட்பீர்கள் என்று அதற்கும் சேர்த்து கொள்ளையடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கருதியிருக்க மாட்டாரா? கொள்ளையடிக்கும் மனிதர்களிடம் கொள்ளையில் பங்கு கேட்பது என்பது, உங்களுடைய அரசியல் நம்பகத்தன்மை முற்றிலும் அழித்துவிடாதா?


எந்த ஒன்றிலும் எந்த தகுதியும் இல்லாத ஆட்சி. இந்த ஆட்சியை பார்த்து ராமதாஸ் சொல்லுகிறார் 8 ஆண்டுகளில் இதுபோன்ற சிறந்த ஆட்சியை பார்த்ததில்லை. இத்தகைய நிலைக்கு ராமதாஸ் ஆளாக வேண்டிய காரணம் என்ன என்று தெரியவில்லை.

ராமதாஸ் 7 இடம் வாங்கிவிட்டார் என்றவுடன், எனக்கும் 7 இடம்தான் என்று விஜயகாந்த் கேட்கிறார். இப்போது சிரமமே இல்லாமல் தோற்கடிக்கக்கூடிய தொகுதி தேமுதிகவின் நான்கு தொகுதிதான் என்று சொல்லுகிறார்கள். ஏனென்றால் அங்கு தலைமை இல்லை, கொள்கை இல்லை, ஒன்றும் இல்லை. அவருக்கு கொடுத்த ரூபாயை எனக்கும் கொடு, அவருக்கு கொடுத்த சீட்டை எனக்கும் கொடு என விஜயகாந்தை முன்னால் வைத்துக்கொண்டு பேசுகிறார்கள். விஜயகாந்த் மனைவி மற்றும் மைத்துனரும் ஒரு பெரும் பணத்தை திரட்டி தேர்தலை சந்திக்கிறார்கள். ஆகாத மனிதர்களெல்லாம் சேர்ந்து அமைந்திருக்கின்ற கூட்டணி அது.



அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா திராவிட முன்னேற்ற கழகமாகி, தீபா திராவிட முன்னேற்ற கழமாகி வளர்ச்சியடைந்தது. வெளியூருக்கு நான் சென்றபோது பார்த்தேன் பெரிய பேனர்கள் வைத்து தீபா பெயர்களை எழுதியிருப்பார்கள். மந்திரியாக இருந்த கண்ணப்பன் தீபாவின் கட்சியில் சேர்ந்தார். என்னோடு எம்எல்ஏவாக இருந்த மலர் மன்னன் அந்தக் கட்சியில் சேர்ந்தார். என்ன இப்படி போய் சேருகிறார்களே என்று கேட்டால், ஜெயலலிதாவைப்போல் இருக்கிறார் அதனால்தான் என்றார்கள். இவையெல்லாம் இந்த நாட்டில் அரசியலில் தலைவராவதற்கு போதுமான தகுதிகள். தீபா தனது டிரைவரை பொதுச்செயலாளராக நியமித்தார். அன்றைக்கு ஓடி வந்தவர்தான் கண்ணப்பன். இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து நீக்கக்கூடிய தேர்தல் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT