ADVERTISEMENT

ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உட்பட 10 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ் அறிவிப்பு

03:38 PM Jul 25, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஷ்வரூபம் எடுத்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வசமிருந்த பொருளாளர் பதவி திண்டுக்கல் சீனிவாசன் வசமும் எதிர்கட்சித் துணைத்தலைவர் பதவி ஆர்.பி.உதயகுமாரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்திவருகிறார்.

நேற்று புதிதாக 14 மாவட்டச் செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத் உட்பட 10 பேரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், கழக இணை ஒருங்கிணைப்பாளராக ஆர். வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் பி.எச்.மனோஜ் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT