ADVERTISEMENT

கம்யூனிஸ்ட் தலைவர்களை இழிவுபடுத்தி அவதூறு செய்வோரைக் கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

06:59 PM Jul 22, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கம்யூனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளர்களையும், தலைவர்களையும், தலைமை அலுவலகத்தையும் அவதூறாக பேசிய சமூக விரோதிகளைக் கண்டித்து இடதுசாரிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பகுதியில் நான்கு (4) மையங்களின் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தையும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் அவதூராக முகநூலில் பதிவிட்ட சமூக விரோதியைக் கைது செய்ய வலியுறுத்தி தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவிப்பது,

‘பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த சில ஆண்டுகளாகவே அமைதியான தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற துடிக்கும் பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் காவி பாசிச மதவெறி கும்பல், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தையும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சுதந்திர போராட்ட தியாகிகளையும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் முற்போக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரை சமூக வலைதளத்தில் அவதூறாக சித்தரித்து பதிவு பதிவேற்றம் செய்தும் தமிழகத்தை வன்முறையாக களமாக மாற்ற துடிக்கின்றனர்.

அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தையும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் அவதூராக முகநூலில் பதிவிட்ட சமூக விரோதியைக் கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறைகூவல் விடுத்த நிலையில் அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இடதுசாரிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பகுதியில் நான்கு (4) மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அவதூராக முகநூலில் பதிவேற்றம் செய்த சமூக விரோதியைக் கைது செய்ய வலியுறுத்தியும் வன்முறையை தூண்டுகிற விதத்தில் பதிவேற்றம் செய்யும் சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் டி.எஸ்.முருகன் தலைமை தாங்கினார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சிவக்குமார், தங்கவேல், கலியமூர்த்தி, வீரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் இளவரசு, நகர செயலாளர் மனோகர், திராவிடர் கழகம் பரந்தாமன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் செல்வகுமார், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அசூர்:

அதேபோல் அரசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கமலநாதன் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் வடிவேல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

மட்டப்பட்டு:

மட்டப்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.கே.குமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சேகர், கிளை செயலாளர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பெரியசெவலை:

பெரியசெவலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் என்.கோதண்டபாணி தலைமை தாங்கினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந்தராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகத்தவர்கள் பலரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT