ADVERTISEMENT

 ’’எடப்பாடி பழனிச்சாமி ஸ்டைலை இனிமேல் யாரும் பின்பற்ற முடியாது’’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

08:43 PM May 12, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடக்க விழா இன்று (மே 12, 2018) நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, திண்டுக்கல் சீனிவாசன், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணிஉள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,’’ஜெயலலிதா ஆட்சியை விட இப்போதைய ஆட்சி பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தால் உடனே அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுவார். முதல்வர் பழனிச்சாமியோ அதை படித்துபார்த்து அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். முதல்வர் பதவி மிகவும் பொறுப்பு வாய்ந்தது. அதற்காக அவர் படும் அவஸ்தைகள் அதிகம்.

ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தூங்க கூடமுடியவில்லை. அந்த அளவிற்கு அவர்களை எல்லாம் முதல்வர் பழனிச்சாமி வேலை வாங்குகிறார்.

ஒரு வருடத்திற்கு மேலாக இந்த ஆட்சியை திறமையாக நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சி நடத்துவதில் எல்லோருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி ஸ்டைலை இனிமேல் யாரும் பின்பற்ற முடியாது. ’’ என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT