Shop

கரோனா எதிரொலி மூலம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யகூடிய கடைகளைத் தவிர மற்ற எந்த கடைகளையும் திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில்தான் திண்டுக்கலில் உள்ள பிரபல பார்வதி ஜவுளிக் கடையில் ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்தனர். இந்த விஷயம் மாநகரில் உள்ள மக்களுக்கு தெரியவந்ததும்,எப்போதும் போல் இந்தப் பார்வதி ஜவுளிக் கடையில் துணி எடுக்க மக்கள் பெருந்திரளாக திரண்டனர்.

Advertisment

இப்படித் திரண்ட மக்கள் கடையில் இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் கடையில் துணிகளை வாங்கி வந்தனராம். இந்த விஷயம் போலீசாரின் காதுக்கு எட்டவே, உடனே மாநகராட்சி கமிஷனர் செந்தில்குமாருக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட பார்வதி ஜவுளிக் கடையைப் பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.