ADVERTISEMENT

கட்சிக்காரன் உயிர் முக்கியமில்ல..! காசுதான் முக்கியமா? - தி.மு.க பகுதி செயலாளரை கேட்கும் தொண்டன்!

11:46 AM Oct 14, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை மயிலை 124ஆம் வட்ட தி.மு.க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தன் சொந்தத் தம்பியாகிய தன்னிடமிருந்தும் சகோதரிகளிடம் இருந்தும் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏமாற்றி அபகரித்து, தான் வகிக்கும் பதவியைக் காட்டி அனைவரையும் பயமுறுத்தியும் ஆட்களைக் கொண்டு அச்சுறுத்தியும் வருவதாக கிருஷ்ணமூர்த்தி தம்பி உமாமகேஸ்வரன் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், பல கோடிக்கு மேல் உள்ள சொத்தை விற்றுவிட்டு யாருக்கும் தராமல் தானே எடுத்துக்கொண்டார். அவரது தம்பியாகிய நான், எனக்குச் சேர வேண்டிய பங்கினைக் கேட்கும்போது அடியாட்களுடன் வந்து என்னை, என் மனைவி உமா மகேஸ்வரி, என் மாமனார் ஆகியோரை மிகக் கடுமையாகத் தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்தோம். பிறகு, வீட்டில் உள்ள பொருட்களையும் களவாடிச் சென்றனர் எனக் கூறியுள்ளார்.

மேலும், அவர் திமுக பகுதி செயலாளருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், "எங்களோட பிரச்சனையை மனிதாபிமானத்தோடு புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பணம் முக்கியமா? பணம் உள்ளவர்களுக்கு மட்டும் நல்ல வாழ்க்கை இருக்கணும். நாங்களெல்லாம் நாசமா போகணுமா? இன்னைக்கு நாங்க செத்தாக் கூட எதுவும் பண்ணமாட்டீங்க. உங்களுக்கு தேவை பணம் இருக்கிறவன் கட்சியில இருக்கணும். கட்சிக்காக குடும்பம் குடும்பமாக ஓட்டு போடுறவங்க தெருவுல நிக்கணும்.

கூட பொறந்தவன்னு கூட பாக்காம 20, 30 பேரை வைச்சு அடிக்குறாங்க. ஃஎப்.ஐ.ஆர் பதிவாகியிருக்கு. கட்சிக்காரங்க என்ற முறையில ஏதாவது ஒரு உதவி செஞ்சிருக்கீங்களா. அவர் (அண்ணன்) கூட உறவாக இருக்கீங்க. எதுக்காக இருக்கீங்க.

பகுதி செயலாளர் யார்? தலைவர்ன்னா நீங்க. உங்களுக்கு கீழ இருக்கிறவங்க தவறு செய்யுறாங்க. தனது சொந்த தம்பியையே சொத்துக்காக தாக்குகிறார்கள். அதற்குத் துணை போறீங்க. எல்லாமே பணத்துக்காக. நீங்களும் பணத்தை வாங்கிக்கிட்டுத்தான் பண்ணுறீங்களா? எங்களோட காயத்துக்கும், எங்களோட நிலைமைக்கும் நீங்களும் காரணமுன்னு சொல்லாம சொல்றீங்க. அவ்வளவுதானே.

உங்ககிட்ட நேரடியாக வந்துகூட சொல்ல முடியலன்னா. அங்கேயும் என்னையும், என் மனைவி, குழந்தைகளை ஆள் வைத்து அடிப்பார்கள். எங்கள் உயிருக்கு கேரண்டி கிடையாது. எந்த தைரியத்துல உங்க ஆஃபீசுக்கு வர முடியும். ஃபோனில் பேசுவது மரியாதைக்குறைவுன்னு நினைச்சீங்கன்னா, நேரில் வர்றேன். பாதுகாப்பு தருவீங்களா?

கிருஷ்ணமூர்த்தி எதிரி கிடையாதுன்னா. உங்கள மாதிரி மேல இருக்கிறவங்க கொடுக்குற இடம்தாண்ணா. கிருஷ்ணமூர்த்தி எங்கப் பணத்தையும், எங்கள் உரிமையும் வாங்கிக் வைத்திருக்கிறார். இதனை வாங்கித்தர வேண்டிய இடத்தில் நீதித்துறை இருக்கிறது. ஆனால் காவல்துறைக்கு காசுகொடுத்து இவ்வளவு ஆட்டம் போடுகிறார். உங்களுக்கும் காசு கொடுத்து உங்கள் வாயையும் அடைக்கிறார். நீங்கள் எல்லோரும் அவருக்குத் துணை போவீங்க, நாங்க மட்டும் கட்சிக்கு ஓட்டுப்போட்டு காலம் காலமாக ஏமாந்து போகணும். நீங்க மேல மேல போகணும். நாங்க நஷ்டப்படணும்.

எம்.எல்.ஏ சீட்டு வேணுமுன்னு கேட்கிறீங்க. ஒரு கட்சிக்காரனை காப்பாத்த முடியல, அப்புறம் எப்படி பொதுமக்களோட பிரச்சனையைத் தீர்ப்பீங்க. நான் இதுவரை உங்களை மரியாதை குறைவா பேசியிருப்பேனா, ஃபேஸ்புக்கில் பாருங்கள் எதுவானாலும் நான் உங்களுக்கு லைக் போடுவேன். விட்டுக்கொடுத்திருப்பேனா. பாராட்டுவேன். நீங்கள் எம்எல்ஏவா வர வேண்டும் என்று பாராட்டியிருக்கிறேன். காசு பணம் வேண்டும் என்பதற்காக எங்களைப்போன்ற விசுவாசிகளை தூக்கிப்போடுறீங்க. துரோகிகளைக் கூட வைச்சிருக்கீங்க.

நீங்க பகுதி செயலாளர், கிருஷ்ணமூர்த்தி வட்டச் செயலாளர். அவர் பணத்தை ஏமாற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நியாயம்தான் ஜெயிக்கும், பணம் ஜெயிக்கும் என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு நாள் கரையும். கிருஷ்ணமூர்த்தி ஒரு நாள் உங்களுக்கு எதிராகவே திரும்புவார். எங்களைக் காயப்படுத்தி ரசிக்கிறிங்கள்ள, எல்லாத்துக்கும் அனுபவிப்பீங்க" என ஆடியோவில் கதறுகிறார்...


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT