Skip to main content

நீதிமன்றத்தை திறந்து வைத்த திமுக சேர்மன்; 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார்

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

 police registered a case against the DMK chairman who opened court pudukkottai

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, பொன்னமராவதி ஆகிய ஊர்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் திருமயத்தில் கூடுதலாக சார்பு நீதிமன்றம் ஆகியவற்றை கடந்த வெள்ளிக் கிழமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) ராஜா, புதுக்கோட்டையில் நடந்த விழாவில் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு பொன்னமராவதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டட வளாகத்தை வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் முன்னிலையில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 

இந்த நிகழ்வு குறித்த படங்கள், வீடியோ பதிவுகள் வெளியான நிலையில், நீதிமன்ற நடைமுறைகளுக்கு மாறாக நடந்த நிகழ்வு குறித்து நீதிபதிகள் அறிவுறுத்தலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற (பொறுப்பாளர்) மகேந்திரன் பொன்னமராவதி காவல் நிலையத்தில், நீதிமன்ற நடைமுறைக்கு மாறாக நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து பொன்னமராவதி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்