ADVERTISEMENT

“மோர்பி விபத்து; இன்னும் எஃப்.ஐ.ஆர் கூட பதியவில்லை” - எம்.பி. ராகுல் காந்தி

09:02 AM Nov 22, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி மராட்டியத்தில் இரு நாள் ஓய்வுக்குப் பின் குஜராத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவும் நடைபெற்று டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ராஜ்கோட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மோர்பி தொங்கு பால விபத்தில் 150 பேர் உயிரிழந்ததற்குக் காரணமானவர்கள் மீது ஏன் எஃப்.ஐ.ஆர் கூட பதியவில்லை. பால விபத்தில் தொடர்புடையவர்கள் பாஜகவுடன் மிக அணுக்கமான தொடர்பில் இருப்பதால்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொழிலதிபர்கள் வாங்கிய பல லட்சம் கோடி கடன்களை வாராக்கடன் எனத் தள்ளுபடி செய்யும் பாஜக அரசு விவசாயிகள் வேளாண்கடன்களை செலுத்தவில்லை என்றால் அவர்கள் மீது கடனைக் கட்டத்தவறியவர்கள் என முத்திரை குத்தி அவமதிக்கிறது. மேலும், பாஜக பழங்குடியின மக்களின் நிலங்களைப் பறித்து தொழிலதிபர்களுக்கு வழங்கி வருகிறது. பழங்குடியின மக்கள் நகரப்பகுதிகளில் வசிப்பதால் அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு,சுகாதாரம் போன்ற வசதிகளைப் பெறுவதில் பாஜக அரசிற்கு விருப்பம் இல்லை” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT