avaniyapuram jallikattu rahul gandhi watching

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து வருகிறார் ராகுல் காந்தி எம்.பி.

Advertisment

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமானம் நிலையம் வந்தார். விமான நிலையத்தில் ராகுலுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

avaniyapuram jallikattu rahul gandhi watching

அதைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக கப்பலூர் வழியாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் இடத்திற்கு வந்தடைந்த ராகுல் காந்தி, ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து வருகிறார். ராகுலுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்து வருகின்றனர்.

Advertisment

ராகுலுடன் ஒரே மேடையில் அமர்ந்து தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.