ADVERTISEMENT

சோனியா காந்தி உள்ளிட்ட 13 தலைவர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்!

03:59 PM Jul 29, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு வழக்கில், மருத்துவப் படிப்புகளில் ஒ.பி.சி. பிரிவினருக்கு 50% வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கோரி இன்று (29-07-2020), தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அகில இந்தியத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசினார்.

சோனியா காந்தி - தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்


சீத்தாராம் யெச்சூரி - பொதுச்செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)


து.ராஜா - பொதுச்செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி


தேவ கவுடா - தலைவர், மதச்சார்பற்ற ஜனதா தளம்


லாலு பிரசாத் யாதவ் - தலைவர், ராஷ்டிரிய ஜனதா தளம்


ஜெகன் மோகன் ரெட்டி - தலைவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்


கே.சந்திரசேகர் ராவ் - தலைவர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி


உத்தவ் தாக்ரே - தலைவர், சிவ சேனா


மமதா பானர்ஜி - தலைவர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்


செல்வி. மாயாவதி - தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி


அகிலேஷ் யாதவ் - தலைவர், சமாஜ்வாதி கட்சி


சரத் பவார், தலைவர், தேசியவாத காங்கிரஸ் கட்சி


உமர் அப்துல்லா, துணைத் தலைவர், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி


ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார்.


இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையடுத்து, முக்கிய அரசியல்கட்சித் தலைவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு கீழ்க்காணும் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினேன்:


1. உடனடியாக, கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது


2. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது


3. மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT