dmk mk stalin announced Duramurugan to be DMK Treasurer

Advertisment

தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுக்குழு கூடும் வரை தி.மு.க. பொருளாளராக துரைமுருகன் தொடர்ந்து நீடிப்பார். கரோனா சூழலில் பொதுச்செயலாளர், பொருளாளரைத்தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது. பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த துரைமுருகன் கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.