ADVERTISEMENT

பெரியார் இருந்திருந்தால் மகிழச்சி அடைந்திருப்பார்.... அரசியல் வண்டியேறும் நடிகை மீரா மிதுன்...

04:32 PM Jul 27, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது திராவிட இயக்கங்கள், கட்சிகள் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர்களைக் கொதிப்படையச் செய்தது. அதன் தொடர்ச்சியாக பெரியாரின் புகழ்பாடும் வகையில் 'ஜெய் பெரியார்' என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது.

சாதிக்கொடுமை, தீண்டாமை, பெண் விடுதலை போன்ற பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பட்டியலிட்டு பலரும் பெரியாருக்கு நன்றி தெரிவித்தனர். அந்தவகையில், சர்ச்சைக்குப் பெயர் பெற்ற நடிகை மீரா மிதுனும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இரண்டு ட்விட்களை போட்டிருந்தார். உடலில் ஆடையில்லாமலும், அரைகுறை ஆடைகளுடன் இருந்த புகைப்படத்தோடு, 'கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நிலவிய பாலின சமத்துவமின்மையைப் பெரியார் கேள்வி எழுப்பினார். பெண்கள் விடுதலைக்குப் போராடினார். யாரும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது, எல்லோரும் வாழ வேண்டும். இந்ந நேரத்தில் நான் பெரியாருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறேன். அவரால் தான் நான் ஒரு தமிழனாக தடைகளை உடைத்து முன்னேறியிருக்கிறேன்' எனக் குறிப்பிட்டு, அதனோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் டேக் செய்திருக்கிறார்.

மீரா மிதுனின் இந்த ட்விட்டிற்கு எதிர்வினையாக பலரும் கமெண்ட் செய்திருக்கின்றனர். அதில், 'உன்ன மாதிரியான ஆளுங்களால பெரியார் பெயருக்குத் தான் அவமானம். இப்படி ஆடையில்லாம இருக்கத்தான் பெரியார் போராடுனாரா?... யார் யாரெல்லாம் பெரியாரை பத்தி பேசறதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு' என வெளுத்திருக்கின்றனர். 'நாம என்ன செஞ்சாலும் மக்கள் நம்மளை வச்சி செய்யுறாங்களே' ங்கிறது தான் இப்போதைக்கு மீரா மிதுனின் மைண்ட் வாய்ஸாக இருக்கும்.

இது குறித்து மீரா மிதுனிடம் பேசிய போது… சினிமாவை விட பெரிய உலகம் பேஷன் டெக்னாலஜி, அது உலக அளவில் பறந்து விரிந்து இருக்கிறது. இந்தத் துறையில் தமிழகத்தில் இருந்து ஒரு பெண் நுழைந்து காலூன்றி இருப்பதற்கு காரணமே பெரியார் தான் என்பதற்கான நன்றி தான் இந்தப் பதிவு. மத்தபடி உடை என்பது, நம்முடைய தமிழ்நாட்டில் தான் இந்தக் கட்டுபாடு எல்லாம் இருக்கிறது, ஆனால் பேஷன் டெக்னாலஜிக்கு கிடையாது, அதுவும் இல்லாமல் சினிமாவில் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து தற்போது, வரை எல்லா நடிகைகளும் செய்வதைப் போலதான் நானும் செய்திருக்கிறேன். இதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை. இப்போது பெரியார் இருந்திருந்தால் மகிழச்சி தான் அடைந்திருப்பார் என்றார்..

சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவில் மீரா மிதுன் இணையப் போவதாகச் செய்திகள் வந்தன. யார் வந்தாலும் வாரி அணைத்துக் கொள்ளும் பா.ஜ.க ஏனோ சூப்பர் மாடல் மீரா மிதுனை கண்டுகொள்ளவே இல்லை. எப்படியாவது அரசியலில் குதித்தால் பரவாயில்லை! என்ற தீர்க்கமான முடிவில் இருக்கும் மீரா மிதுன் இந்த ட்விட்டில் மோடியையும், ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார். பதிலுக்கு ரெஸ்பான்ஸ் செய்தால் தமிழகத்துக்கு நல்லது. இல்லையென்றால் 'அடுத்த புரட்சித் தலைவி நான் தான்' என மீரா மிதுன், சாரி சூப்பர் மாடல் மீரா மிதுன் புதிதாக கட்சி ஆரம்பித்து கரோனா காலத்திலும் எல்லோரையும் அலறவிடுவார் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT