Controversial Rose; Sunny Leone is peppered with questions

ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜா சன்னி லியோன் குறித்து மேடையில் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு கேள்விகளை சன்னிலியோன் ரோஜாவிற்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக வைத்துள்ளார்.

Advertisment

ஆந்திராவில் வரவிற்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் 'வாராகி யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் ஒன்றை தொடங்கி பேசி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நடந்த கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரமான ரோஜா, 'பவன் கல்யாண் முதலமைச்சருக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் பொழுது சன்னி லியோன் ஒழுக்கத்தைப் பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது' என பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசியுள்ளார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகை சன்னி லியோன் அவரது டிவிட்டர் பக்கத்தில் ரோஜா பேசிய அந்தவீடியோவை பதிவிட்டு 'தான் ஒரு ஆபாச நடிகை தான் என்றாலும் தனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை.உங்களைப்போல் இல்லாமல் நான் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்வேன். உங்களால் வெளிப்படையாக உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை என்னைப்போல் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார். தற்பொழுது சன்னி லியோனின்இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Advertisment