Skip to main content

பெரியார் பற்றி மீண்டும் சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து கூறிய பாஜகவின் எச்.ராஜா!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு  முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்து இருந்தார். 
 

h.raja

 


இந்த நிலையில் பெரியாரின் நினைவு தினமான (24.12.2019) இன்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஈவேரா பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்தார். அதேபோல லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானியை ஆளவேண்டும் என்று தீர்மானம் போட்டார். ஆகவே இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது "டெரரிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும்" என்று கருத்து கூறியுள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்