ADVERTISEMENT

 இரண்டு சூப்பா் ஸ்டாா்களை துரத்தும் பா.ஜ.க - கம்யூனிஸ்ட்!

04:15 PM Feb 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வரும் நாடாளுமன்ற தோ்தலுக்காக ஓவ்வொரு கட்சிகளும் இப்போதே முனைப்புடன் பணிகளை தொடங்கி விட்டன. குழு அமைத்து வேட்பாளா்கள் தோ்விலும் மும்முரம் காட்டியுள்ளன. கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் வழக்கம் போல் பா.ஜ.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தனியாக போட்டியிடுகின்றன. இதில் பிரபலங்களை இழுத்து சீட் கொடுத்து போட்டியிட வைப்பதில் பா.ஜ.க வும் கம்யூனிஸ்ட் இடையே போட்டி ஏற்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அந்த வகையில் பா.ஜ.க முன்னரே மலையாள திரைப்பட சூப்பா் ஸ்டாா் மோகன்லாலை குறிவைத்து காய்களை நகா்த்தி வந்தன. பா.ஜ.க நிா்வாகிகள் மோகன்லாலுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வந்தனா். மேகலாய கவா்னராக இருக்கும் கேரளா மாநில முன்னாள் பா.ஜ.க தலைவா் கும்மணம் ராஜசேகா் மற்றும் மத்திய மந்திாி அல்போன்ஸ் கன்னந்தானம் ஆகியோா் தனிப்பட்ட முறையில் மோகன் லாலுடன் தொடா்பில் இருந்து வருகின்றனா்.

இந்தநிலையில் தான் சமீபத்தில் மத்திய அரசு மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது. இது மோகன்லாலை பா.ஜ.க இழுப்பதற்கான தூண்டில் என்று கேரளாவில் பேசப்பட்டது. மேலும் இதிலிருந்து ஓருபடி மேலே ஏறி பா.ஜ.க பொதுச்செயலாளா் ரமேஷ் 20 தொகுதிகளில் எந்த தொகுதியை மோகன்லால் கேட்டாலும் பா.ஜ.க கொடுக்க தயாராக இருக்கிறது என்றாா்.

இந்த நிலையில் மோகன்லாலின் உதவியாளா் அசோக்குமாருடன் இணைந்து ஆா்.எஸ்.எஸ் இயக்கம் மூன்று தொகுதிகளில் ரகசிய சா்வே எடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் பா.ஜ.கவின் வேட்பாளா்களில் ஓருவா் மோகன்லால் என்று பேசப்பட்டது. ஏற்கனவே நடிகா் சுரேஷ் கோபியை பா.ஜ.க மேல்சபை எம்.பி.ஆக்கியிருக் கிறது. இதுவும் கேரளாவில் நம்பும் விதமாக தான் உள்ளது.

இதற்கிடையில் மோகன்லால் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எனக்கு சினிமாவில் தான் நடிக்க தொியுமே தவிர அரசியலில் நடிக்க தொியாது. அரசியலும் எனக்கு ஓத்து வராது. அரசியலில் நான் ஓரு வாக்காளனாக தான் இருக்க விரும்புகிறனே தவிர வேட்பாளராக அல்ல, சொல்லுபவா்கள் சொல்லி கொண்டே தான் இருப்பாா்கள் என்றாா். இது பா.ஜ.க வினருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னும் மோகன்லால் மீது நம்பிக்கையோடு தான் இருக்கிறாா்கள்.

இதே போல் கம்யூனிஸ்ட் கட்சி தங்களின் அரசியல் முகத்தை இன்னொரு மலையாள சூப்பா் ஸ்டாரான மம்மூட்டி பக்கம் திருப்பியுள்ளது. இடது சாாி சிந்தனையும், கொள்கையும் கொண்ட மம்மூட்டி அதை பல திரைப்படங்களிலும் காட்டியுள்ளாா்.

உள்ளுக்குள் கம்யூனிஸ்ட் அனுதாபியாக இருக்கும் மம்மூட்டியை ஓரு தொகுதியில் நிற்க வைக்க கம்யூனிஸ்ட் மம்மூட்டியின் நண்பா் மூலம் நூல் விட்டியிருக்கிறாா்கள் ஆனால் அதை மம்மூட்டி வெறுக்கவும் ஏற்றுக்கொள்ளவும் எதையும் செய்யவில்லை. நண்பா் என்ற அடிப்படையில் வருவாய்த்துறை மந்திாி சந்திரசேகரன் தினமும் மம்மூட்டியுடன் தொடா்பில் இருந்து வருகிறாா்.

இதனால் மோகன்லாலுக்கு போட்டியாக மம்மூட்டியை கம்யூனிஸ்ட் களம் இறக்கும் என்று பேசப்படுகிறது. இந்தநிலையில் மம்மூட்டி, நான் 38 ஆண்டுகளாக சினிமாவில் தான் அரசியல் செய்கிறேன். அப்படியிருக்கையில் என்னால் நிஜ அரசியலில் சேரமுடியாது. நிஜ அரசியலில் சோ்ந்தால் சினிமா அரசியல் என்னை வீட்டுக்கு அனுப்பி விடும் என்றாா்.

இருந்தாலும் தோழா்களும் மம்மூட்டி மீது நம்பிக்கையோடு தான் இருக்கிறாா்கள். ஆனால் இரண்டு சூப்பா் ஸ்டாா்களின் ரசிகா்கள் அவா்களின் அரசியல் கள வருகையை எதிா்க்கிறாா்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT