dubai honors famous actor following Mohanlal Mammootty

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, திரிஷா, நாசர் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர் ரஹ்மானுக்கு தற்போது அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. மலையாளத்தில் மோகன் லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் இவர்களை தொடர்ந்து தற்போது ரஹ்மானுக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது.

Advertisment