ADVERTISEMENT

குமரி இடைத்தேர்தல்- மார்ச் 1 முதல் காங்கிரஸில் விருப்ப மனு!

06:21 PM Feb 28, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறவுள்ள 2021 கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து வருகிற மார்ச் 1 முதல் 5- ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது.

ADVERTISEMENT

விருப்ப மனுக்களை அளிக்க விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் ரூபாய் 500 கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 5- ஆம் தேதிக்குள் ரூபாய் 25,000 கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்தும், இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் சேர்த்து இணைத்து நன்கொடை தொகையை 'TAMILNADU CONGRESS COMMITTEE' என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft, Payable at Chennai ) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் மார்ச் 1 முதல் 5- ஆம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card), ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் பான் கார்டு (Pan Card) நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT