ADVERTISEMENT

'கடையநல்லூரில் களமிறங்கும் ஐ.யூ.எம்.எல்; மற்ற இரு தொகுதிகள் எது?' - காதர் மொய்தீன் பேட்டி 

11:35 AM Mar 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மற்ற கட்சிகளுடன் தி.மு.க. தலைமை தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. அதேபோல் நாளை (10.03.2021) திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகும் என திமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், இன்று திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லுர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், ''இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடையநல்லுர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகள் எது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று மாலை வரச் சொல்லியிருக்கிறார்கள். ஆம்பூர், வாணியம்பாடியில் ஒன்றும், சிதம்பரம், பாபநாசத்தில் ஒன்றும் திமுக ஒதுக்கும்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT