Stalin's speech in election

Advertisment

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (30.03.2021) கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், 'கொளுத்தும் வெயிலை விட அதிமுக ஆட்சி மிகவும் கொடுமையானது. திமுக வென்று ஆட்சிக்கு வந்தால் குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட மாட்டாது. சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட்ட மாட்டாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னாலும், தேர்தலில் அதிமுக வென்றால் மாற்றிப் பேசுவார்'' என்றார்.