ADVERTISEMENT

“மனிதாபிமான முறையில் செயல்படக் கூட அவர் தயாராக இல்லை” - திருமாவளவன்

06:22 PM Mar 10, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆளுநரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் வரலாற்றை உணர்த்தும் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ புகைப்படக் கண்காட்சி நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்பாடு செய்த இந்த கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கண்காட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து தொல் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இவ்வளவு உயிரிழப்புகளுக்குப் பிறகும் இரக்கமில்லாமல் அதை தடை செய்ய முடியாது. மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால் அவருடைய மனிதாபிமானம் கேள்விக்குறியாக உள்ளது. அவர் சட்டப்படி செயல்பட வேண்டும். அதிகாரத்தை பின்பற்றி செயல்பட வேண்டும் என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மனிதாபிமானம் கொண்ட முறையில் செயல்படுவதற்கு கூட அவர் தயாராக இல்லை.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் சூதாட்ட நிறுவனங்களை நடத்தக்கூடியவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளார்கள் என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிறகு தான் இவ்வாறு அவர் திருப்பி அனுப்பியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. பாஜகவை சார்ந்தவர்கள் சூதாட்டத்தை நியாயப்படுத்துகிறார்கள். மகாபாரதத்தில் கூட சூதாட்டம் உள்ளது என்று சொல்லும் அளவிற்கு பிற்போக்கானவர்களாக உள்ளார்கள். ஆளுநரின் போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியது. ஆளுநரை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT