ADVERTISEMENT

“அவர் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு 500 ஏக்கரில் குடியிருக்கலாம்” - ராஜன் செல்லப்பா

12:19 PM Dec 14, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் பால் விலையுயர்வு ஆகியவற்றைக் கண்டித்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கட்சியின் பல்வேறு தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். திருச்சி, ஈரோடு, சத்தியமங்கலம், தேனி, அரியலூர், திருச்செந்தூர், புதுக்கோட்டை, வந்தவாசி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூரில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, “ஓபிஎஸ் குஜராத்திற்குச் சென்றபோது காவித்துண்டுடன் காணப்பட்டார். மரியாதை நிமித்தமாகப் போட்டிருந்து இருக்கலாம். மரியாதை கருதி மாலையைப் போட்டதும் கழற்றிக் கொடுப்பது போலக் கழற்றிக் கொடுத்திருக்க வேண்டும். அவர் அந்த உடையுடன் வணக்கம் போடுகிறார். பேட்டி கொடுக்கிறார்.

ஆகவே, ஓ.பன்னீர்செல்வத்தினை பாஜகவிற்கும் போகச் சொல்லவில்லை. பாஜகவும் அவரை விரும்பவில்லை. அவரை பொறுத்தவரை அதிமுக தொண்டர்களைக் குழப்ப வேண்டும் என்றே இப்படிச் செய்கிறார்.

இவ்வளவு பணிந்து; இவ்வளவு இறங்கிப் போகிற நீங்கள் மத்திய அரசிடம் கேட்டு ஆளுநர் பதவியை வாங்கிச் சென்றுவிடலாம். ஒரு பிரச்சனையும் இருக்காது. நிம்மதியா 500 ஏக்கரில் குடியிருக்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT