ADVERTISEMENT

அரசியல் களத்தில் ராம் மோகன் ராவ்... கண்காணிக்கும் எடப்பாடி அரசு... அரசியல் பின்னணி என்ன?

02:53 PM Feb 13, 2020 | Anonymous (not verified)

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்திய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், அதிரடியாக சோதனை நடந்தது. இதனையடுத்து, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அரசியல் மற்றும் சங்கப் பணி என்று களத்தில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT



அதாவது, ஜெ.’ ஆட்சிக்காலத்தில் செல்வாக்கான அதிகாரியாக இருந்தவர் ராம் மோகன் ராவ். இவர் பணி ஓய்வுக்குப் பிறகு, ஆந்திராவில் கட்சி ஆரம்பித்த நடிகர் பவன் கல்யாணிடம் அரசியல் ஆலோசகராக சேர்ந்து பணியாற்றினார். அதேபோல் தி.நகர் ஆந்திர கிளப்பில், நாயுடு சமூகத்தினரை வர வழைத்து ஆலோசனை நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி மதுரையில் நடந்த திருமலை நாயக்கரின் 437 ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவரிடம், தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தும்படி விழா நடத்திய தெலுங்கு இனத்தவர் கூறியுள்ளார்கள். இதற்கு ராம் மோகன் ராவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்கின்றனர். இதனால் முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவை எடப்பாடி அரசு கண்காணித்துக் கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT