ADVERTISEMENT

இளங்கோவனா? கணேசமூர்த்தியா? ஈரோடு தொகுதி பங்கீடு யுத்தம்!

07:52 PM Feb 24, 2019 | jeevathangavel

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கூட்டணியில் சேர்ந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக கட்சிக்கு எத்தனை தொகுதி? எந்த தொகுதி? கொடுக்கப்படும் என இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. இருப்பினும் ஈரோடு பாராளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சியும், மறுமலர்ச்சி திமுகவும் தங்களுக்கு தான் என பேச தொடங்கி விட்டது.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியில் அதன் முன்னாள் தலைவரும் ஈரோட்டைச் சேர்ந்தவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். அதேபோல மதிமுகவில் அக்கட்சியின் பொருளாளரான ஈரோடு கணேசமூர்த்தி பெயர் அக்கட்சி பட்டியலில் உள்ளது. ''பெரும்பாலும் ஈரோடு தொகுதி எனக்குத்தான்'' என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது தேர்தல் பணியை ஈரோடு பகுதியில் சுவர் எழுத்து மூலம் தொடங்கி விட்டார். அதேபோல ''ஈரோடு தொகுதி நமக்குத் தான் வரும்'' என மதிமுகவினர் கணேசமூர்த்தி தான் வேட்பாளர் என நம்பிக்கையோடு பேசி வருகிறார்கள்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசுக்கா? ம.தி.மு.க.வுக்கா?. என்பதே தெரிய வராத நிலையில் ஈரோடு தொகுதி இளங்கோவனுக்கா ? கணேசமூர்த்திக்கா? என்பது இரு கட்சிகளிடம் யுத்தமாக நடந்து வருகிறது. இவர்களுக்கு தொகுதி கொடுக்கும் கட்சியான தி.மு.க.வினர் மொத்தத்தில் நமக்கு இல்லை என்பதை சிலர் உற்சாகமாகவும் பலர் ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT