ADVERTISEMENT

இருட்டறைக்குள் சிதைக்கப்படுகிறதா மக்கள் அதிகாரம்? புதிர் நிரம்பிய ஜனநாயகம்..!

10:02 PM May 08, 2019 | jeevathangavel

ADVERTISEMENT

என்னமோ நடக்குது உலகத்துல... மர்மமா இருக்குது... ஒன்னுமே புரியலே....,இந்த பாடல் இப்போது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கச்சிதமாக பொறுந்திப் போகிறது என்கிறது இந்திய அரசியல் வட்டாரம்.

ADVERTISEMENT

பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் டெம்போவில் பயணம் செய்கிறது ... உ.பி.யில் ஓட்டல் கடையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பதுக்கப்படுகிறது. சதீஸ்கரில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஓட்டு தாமரைக்கு தான் விழுகிறது. குஜராத்தில் வாக்களிக்க வந்தவர்களை வாக்கு மிஷின் அருகே நிறுத்திவிட்டு ஒரே நபர் தொடர்ந்து பட்டனை அழுத்திக் கொண்டுள்ளார்...


இந்த மாயாஜால விளையாட்டின் கதாபாத்திரம் தமிழ்நாட்டிலும் முகம் காட்டுகிறது. மதுரை தொகுதி வாக்குப் பதிவான மின்னனு இயந்திரங்கள் உள்ள அறைக்குள் சென்று இரண்டு மணி நேரம் இருந்து வந்தார் ஒரு தாசில்தார். இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே தேனி தொகுதிக்குட்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்திற்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி 50 மின்னனு வாக்கு இயந்திரங்கள் வந்து இறங்குகிறது. அரசியல் கட்சியினர் அவர்களாகவே எப்படியோ தகவல் தெரிந்து கேட்டால் அது சில பூத்களில் மறுவாக்குப்பதிவுக்காக என்று பதில் கூறுகிறார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.


ஒவ்வொரு தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு அந்தந்த ஊரில் உள்ள கல்லூரி அல்லது அரசு கட்டிடங்களில் பாதுகாப்பாக அதுவும் மூன்றடுக்கு பாதுகாப்பாக உள்ளது என தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வன்முறை வெடிக்கவில்லை. ஓட்டுமிஷின் உடைக்கப்படவில்லை. எதிர்கட்சியோ அல்லது ஆளுங்கட்சியோ இந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை யாரும் வைக்கவில்லை.

பிறகு ஏன் தேனிக்கு சில பூத்களில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்? தேர்தல் ஆணையமே மறு வாக்குப்பதிவுக்கு தாமாக முடிவு செய்வது எதனால்? இதற்கு தான் இப்படியொரு பதிலை கூறுகிறது தேர்தல் ஆணையம். ஒவ்வொரு தொகுதியிலும் மாதிரி வாக்குப்பதிவு அந்த வாக்கு இயந்திரத்தில் நடந்தது அதை பல இடங்களில் அதிகாரிகள் டெலிட் செய்யாமல் விட்டு விட்டார்கள் என்பது தான். இதற்காக தான் தேனிக்கு மட்டுமல்ல ஈரோட்டுக்கும் இயந்திரங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது என கூறியுள்ளது. இதற்காக ஈரோட்டிற்கு 20 விவிபேட் இயந்திரங்கள் வந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்தமில்லாமல் வந்து இறங்கியிருக்கிறது...., முதலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் வந்திருக்கின்றன என தகவல் வெளியான நிலையில், விவிபேட் தான் வந்திருக்கிறது என அதிகாரிகள் தரப்பில் உறுதிப்படுத்தினர்.

ஈரோட்டில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது என்றும், என்ன காரணத்திற்காக விவிபேட் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் விசாரிக்கையில், ‘காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி பூத் நெம்பர் 248 ல் நடந்த வாக்குப்பதிவில் ஒருசில தவறுகள் நடந்திருக்கிறது. அங்கு பதிவான 50 மாதிரி வாக்குகளை அழிக்காமல், தொடர்ந்து வாக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் மாதிரி வாக்குப்பதிவோடு சேர்ந்து மொத்தம் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஒன்பது வாக்குகள் குறைந்திருக்கிறது. இதனால் கடும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்த ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் வாக்குப்பதிவு செய்வதற்காக விவிபேட் இயந்திரங்களைக் கோவையில் இருந்து வாங்கி வைத்திருக்கிறோம்” எனக் கூறினார்.

அங்கு பதிவான வாக்குகள் மொத்தம் 736 மாதிரி வாக்குகள் 50 ஆக மொத்தம் அந்த இயந்திரத்தில் 786 வாக்குகள் இருக்க வேண்டும். ஆனால் அதில் 777 தான் பதிவில் உள்ளது. 9 வாக்குகள் குறைவாக காட்டியது என்கிறார்கள்.


கையால் எழுதும் கணக்கில் கூட்டல், கழித்தலில் மனித தவறு நடப்பது இயல்பானது. தேர்தல் ஆணையம் திரும்ப திரும்ப கூறுவது போல நூறு சதவீதம் நம்பக தன்மை வாய்ந்தது என்று எல்லோரும் நம்புவோம். இந்த 248 வது பூத்தில் 9 ஓட்டு எங்கே போனது என்கிற ரகசியம் யாருக்கும் தெரியவில்லை. அதனால் மறுதேர்தலாம். இதையும் ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்கள் நம்புவோம்.


வாக்கு பெட்டிக்குள் இருப்பது "மக்கள் அதிகாரம்..." ஆனால் அதை 23 ந் தேதி வரை இருட்டறைக்குள் வைத்து கையாள்வது அதிகார வர்க்கம் என்கிற மக்கள் தொடர்பற்ற "அதிகார பீடம்" தான். இது சிதைக்கப்படுகிறதா? சீர்படுத்தப்படுகிறதா? புதிர் நிரம்பியதாக உள்ளது...வாழ்க ஜனநாயகம்...!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT