ADVERTISEMENT

“எத்தனை தலைநகரங்கள் அமைக்க முடியும்?” முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு!

06:42 PM Sep 22, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

இன்று (22/09/2020) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; தொடர்ந்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த சீரிய நடவடிக்கையால் பல்வேறு பலனை தற்போது தமிழகம் பெற்றுவருகிறது. அரசு கூறும் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டத்திற்கு எதிராகப் பேசியதால், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும். மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய திட்டமாகத்தான் அது இருக்கும்.

தற்போது உள்ள மசோதா, ஏற்கனவே தமிழகத்தில் பின்பற்றி வரப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்தச் சட்டம் இல்லாததால் தமிழக விவசாயிகள் எந்த வகையிலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். தமிழக மக்கள், விவசாயிகளுக்கு எதிராக எந்தத் திட்டங்கள் வந்தாலும் எதிர்ப்போம். வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.


8 மாதத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு “ஸ்டாலின் ஜோதிடம் பார்ப்பவராக இருக்கிறார். நாங்கள் ஜோதிடம் பார்க்கவில்லை. மக்களைத்தான் நம்புகிறோம். துரைமுருகன் மகனை யாராவது மிரட்ட முடியுமா? சாதாரண தி.மு.க தொண்டனைக்கூட மிரட்ட முடியாது. மதுரையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவக் கல்லூரிகள் வழங்கியுள்ளோம். அதேபோன்ற கல்வியில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

ரூ.14,000 கோடி மதிப்புள்ள காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல மாவட்டங்களுக்குச் சென்று அங்கு உள்ள ஏரிகளில் தடுப்பணை கட்டி வருகின்றோம்.” என்றார்

தமிழகத்தின் இரண்டாம் தலைநகர கோரிக்கை குறித்த கேள்விக்கு “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாவட்டத்தையும் தலைநகரமாக அறிவிக்கக் கோரி கூறுவதால் எத்தனை தலைநகரங்கள் அமைக்க முடியும்.”

தமிழகத்தில் லாக்கப் டெத் அதிக அளவில் இருப்பது குறித்த கேள்விக்கு, “சிறை மரணம் என்றால் உரிய விசாரணை நடத்தப்படும். அதில், யார் தவறு செய்தாலும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இறைவன் கொடுத்துள்ள உடலை மக்களுக்குத் தியாகம் செய்வதற்காக, தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு கரோனா சூழலிலும் மக்கள் சேவையில் தொடர்ந்து தமிழக அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. டெல்லி போன்ற வட மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் தமிழகத்தில், குறிப்பாகச் சென்னையில் கரோனா குறைந்து வருவது அமைச்சர்கள் முயற்சியால்தான்.” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT