Minister RP Udayakumar election campaign

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.

Advertisment

இந்நிலையில்,அதிமுகசார்பில் மதுரை திருமங்கலத்தில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மறவக்குளம், கப்பலூர், தருமத்துப்பட்டி ஆகிய இடங்களில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது 'அதிமுகஅறிக்கையில் மக்களைப் பாதுகாக்கும், மகிழ்ச்சியூட்டும் பல திட்டங்கள் வெளியாக இருக்கிறது' என்றார்.