ADVERTISEMENT

“அ.தி.மு.க. இருக்கிற இடமே தெரியாமல் போய்விட்டது” -டி.ஆர்.பாலு

10:09 AM Sep 30, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

மக்கள் விரோத வேளாண் சட்டங்களைப்பற்றி திமுகவின் கடைக்கோடி தொண்டனுக்கும் தெரிந்துள்ளது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. தமிழக முதல்வரும் இதில் கலந்துக்கொண்டிருந்தால் அவருக்கு அதுபற்றி தெரிந்திருக்கும். என தனக்கே உரிய பாணியில் கூறியிருக்கிறார் டி.ஆர்.பாலு.

திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு, தி.மு.க பொருளாளராக பதவி ஏற்றபிறகு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் டி.ஆர்.பாலு. பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தி.மு.க தலைவர் ஸ்டாலின் நிச்சயம் கோட்டைக்கு செல்வது உறுதியாகி உள்ளது. மக்கள் விரோத வேளாண் சட்டங்களைப்பற்றி தி.மு.கவின் கடைக்கோடி தொண்டனுக்கும் தெரிந்துள்ளது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. தமிழக முதல்வரும் இதில் கலந்துகொண்டிருந்தால் அவருக்கு அதுபற்றி தெரிந்திருக்கும்.

அ.தி.மு.க என்ற கட்சியே கிடையாது. அக்கட்சியில் குழப்பம் நீடிப்பது பற்றி தமிழக பொதுமக்கள் கவலைப்படவில்லை. இப்போது அ.தி.மு.க என்கிற கட்சி இருக்கிறதா, எம்.ஜி.ஆர். இருந்தபோது அ.தி.மு.க கட்சி இருந்தது. அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து தேய்ந்து இப்போது இருக்கிற இடமே தெரியாமல் போய்விட்டது. தி.மு.க கூட்டணி பற்றி தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT