ADVERTISEMENT

பாமகவை அதிர வைத்த ஸ்டாலின்...பாமகவிற்கு செம்ம செக்...அதிர்ச்சியில் பாமக!

05:02 PM Oct 10, 2019 | Anonymous (not verified)

விக்கிரவாண்டி பிரச்சாரத்துக்கு கிளம்புறதுக்கு முன்னாடி, தொகுதியின் வாக்கு வங்கியை மனதில் வைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுப்போம் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று 41 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி, தன் பலத்தைக் காட்டியுள்ளது. அதை மனதில் வைத்து தான் மு.க.ஸ்டாலின்கிட்டேயிருந்து இந்த அறிவிப்பு வந்திருக்கு என்று கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இது நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

ADVERTISEMENT



அதோடு, வன்னியர் இடஒதுக்கீட்டுக்காகப் போராடி உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றம் அறிவித்துள்ளார். தி.மு.க.வின் மூத்த தலைவரும், 1952லேயே தனித்து தேர்தல்களம் கண்டு, உதய சூரியன் சின்னத்தில் முதன் முதலில் வெற்றி பெற்றவருமான மறைந்த ஏ.கோவிந்தசாமிக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அண்ணா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவரான ஏ.கோவிந்தசாமி இறந்தபோது, ஸ்டாலின் கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க. அமைப்பை நடத்தியுள்ளார். அதோடு ஏ.கோவிந்தசாமி குடும்பத்துக்கு நிதி திரட்டும் வகையில், எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்' படத்தை சென்னையில் ஸ்பெஷல் ஷோ திரையிட்டு, அதில் வசூலான பணத்தை நிதியாக கொடுத்துள்ளார். இது நீண்ட நாள் பந்தம் என்கின்றனர்.

ADVERTISEMENT


ஆனாலும், விழுப்புரம் மாவட்ட அரசியலில் பொன்முடிக்கும் ஏ.கோவிந்தசாமி மகன் ஏ.ஜி.சம்பத்துக்கும் நடந்த முட்டல் மோதலால், ஏ.கோவிந்தசாமியின் நூற்றாண்டு விழாவைக்கூட தி.மு.க. சரியா கொண்டாடவில்லை. அந்த முணுமுணுப்பு கட்சிக்குள் அடங்காமல் இருந்தது. தற்போது மணிமண்டபம் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டதும், ஏ.கோவிந்தசாமி குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். வன்னியர்களுக்கு திமுகவின் புது அறிவிப்பை பார்த்து பாமக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT