ADVERTISEMENT

கரோனா தொற்றால் முதல்வரின் தனிச்செயலாளர் மரணம்... வேதனையளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

02:58 PM Jun 17, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,091- லிருந்து 3,54,065 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900- லிருந்து 11,903 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது. அதேபோல் தமிழகத்தில் 48,019, டெல்லியில் 44,688, குஜராத்தில் 24,577, ராஜஸ்தானில் 13,216, மத்திய பிரதேசத்தில் 11,083, உத்தரப்பிரதேசத்தில் 14,091, ஆந்திராவில் 6,841, தெலங்கானாவில் 5,406, கர்நாடகாவில் 7,530, கேரளாவில் 2,622, புதுச்சேரியில் 216 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச் செயலர் கரோனா தொற்று காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தி.மு.க.-வின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், முதலமைச்சரின் தனிச்செயலாளர் திரு.தாமோதரன் கரோனா தொற்று காரணமாக இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் என்றும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்களின் பாதுகாப்பை தமிழக முதல்வர் உறுதி செய்திட வேண்டும். இனி ஒரு முன்களப் பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்று கூறியுள்ளார். அதே போல் வி.சி.க. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், தமிழக முதல்வர் அவர்களின் தனிச்செயலாளர் தாமோதரன் கரோனாவுக்குப் பலியாகியுள்ளார் என்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT