ADVERTISEMENT

“இளைய தலைவர் என்றுதான் இனி எல்லோரும் அழைக்க வேண்டும்” - திண்டுக்கல் ஐ லியோனி

11:39 AM Dec 24, 2022 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் 7000 கழக முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகள் வழங்கினார்.

தமிழக பாடநூல் நிறுவனத் தலைவரும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ லியோனி பேசும்போது, "கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி முதல் அரசுமுறை சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது, நாம் வெற்றிப்பயணத்தைத் தொடர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. தற்போது அமைச்சராகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை வைத்தும், ஒருவர் இன்னொருவர் காலில் விழுந்து பதவிக்கு வந்தவர் என்ற ஒரு புகைப்படத்தை வைத்தும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாஸ் காட்டினார். அதேபோல் எளிமையாக அந்த இடத்தில் கிடைக்கும் விஷயத்தை வைத்து பிரச்சாரம் செய்தார்.

உதயநிதியை சின்னவர் என்று அழைக்க வேண்டாம். அம்மா சின்னம்மா என்பது அவர்களோடு போகட்டும். இனி உதயநிதியை இளைய தலைவர் என்றுதான் இனி எல்லோரும் அழைக்க வேண்டும். அதேபோல் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காந்திராஜன் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT