Skip to main content

திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 25 லட்சத்திற்கான நிவாரண பொருட்கள்!

Published on 19/08/2018 | Edited on 27/08/2018

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அரசும் முயன்ற உதவிகளை செய்து வருகிறது அதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கேரளவுக்கு மருத்துவ பொருட்களும், அத்தியாவசிய பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது 

       

kerala

 

 

 

இந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள வர்த்தகசங்கம்,ரோட்டரிகிளப், லயன்ஸ்கிளப் மற்றும் தன்னார்வ தொண்டுஅமைப்புகள் மூலமாக 25 லட்சம் மதிப்புடைய அரசி, பருப்பு, எண்ணெய், குடிதண்ணீர் பாட்டில்கள்,குழந்தைகளுக்கு பால்பவடர், கம்பிள, வேஷ்டி, சுடிதர், துண்டு, தட்டு, பிஸ்கட், பேனா, பென்சில், பிஸ்கட், குளுகோஸ்,சேலை உள்பட நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டது. இதில் பிரபல சாகர் மெடிக்கல் சார்பில் 5 லட்சத்திற்கான காசோலையே மாவட்ட கலெக்டர் வினையிடம் வழங்கினார்.

 

kerala

 

 

 

இந்த அத்தியாவசிய பொருட்களை திண்டுக்கல் கலெக்டர்  அலுவலகம்  கொண்டு வரப்பட்டு அங்கிருந்து நான்கு  லாரிகளில் கேரளாவுக்கு ஏற்பட்டது  அதை வனத்துறை அமைச்சர்  சீனிவாசன் மற்றும்  மாவட்ட கலெக்டர் வினைய் ஆகியோர் கொடி அசைத்து அந்த வாகனங்களை கேரளாவுக்கு அனுப்பிவைத்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

“போன முறை மாம்பழத்தோடு எங்க கூட இருந்தீங்க... இந்த முறை அவங்களோட இருக்குறீங்க” - சீனிவாசன் கிண்டல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dindigul Srinivasan taunts pmk candidate

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணியில்  உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரும் வேட்பாளருமான முகமது  முபாரக்கும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா உள்பட சில சுயேட்சைகள் போட்டிப் போடுகிறார்கள்.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதேபோல் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக், முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Dindigul Srinivasan taunts pmk candidate

அதேபோல் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தத்துடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் அதிகாரியான பூங்கொடியிடம் சி.பி.எம்.  சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இப்படி மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒரு பக்கம் சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது, முதலில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ம.க. வேட்பாளர் திலகபாமா ஒரு அறையில் உட்கார்ந்துவிட்டு வெளியே வரும்போது, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், திலகபாமாவை பார்த்த உடன் நீங்களும் இங்கேயா இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா... என்று கேட்டவாறே, கடந்த முறை மாம்பழம் சின்னத்தில் எங்களோடு இருந்தீங்க. இந்த முறை அவங்களோட இருக்குறீங்க... என்று கிண்டலடித்தவாறே திலகபாமாவிடம் கேட்டார். அதைத் தொடர்ந்து உடன் வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலரும் திலகபாமா உட்பட உடன் வந்தவர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

“மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களின் கவனத்திற்கு” - முதல்வர் முக்கிய உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Attention of owners of houses damaged by rain and flood 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளைப் பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

இவ்வாறு மழை வெள்ளத்தினால் பகுதியாகச் சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு ரூ. 2 இலட்சம் வரையும் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 4 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாகச் சேதமடைந்த 955 வீடுகளுக்குப் பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ. 45.84 கோடி வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.