ADVERTISEMENT

வேட்பு மனு தாக்கல் செய்ய ரூ.25 ஆயிரம் சில்லரையாக கொண்டு வந்த வேட்பாளர் (படங்கள்)

01:14 PM Mar 25, 2019 | rajavel

ADVERTISEMENT


2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயும், சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயும் தேர்தல் டெபாசிட் செய்ய வேண்டும். இதுவே எஸ்சி, எஸ்டி என்றால் இந்தக் கட்டணத்தில் 50 சதவீதம் டெபாசிட் செய்தால் போதும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது டெபாசிட் தொகைக்கான டிமாண்ட் டிராஃப்ட்டையும் இணைக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று தென்சென்னை தொகுதியில் போட்டியிட சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி 13-வது மண்டல அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் அம்மா மக்கள் தேசிய கட்சியின் நிறுவனர் குப்பல்ஜி தேவதாஸ். சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அவர், டெபாசிட் தொகையான ரூபாய் 25 ஆயிரத்தை சில்லரையாக கொண்டு வந்தார். முன்னதாக அவர் தான் கொண்டு வந்த சில்லரை தொகையை செய்தியாளர்களிடம் காண்பித்தார். மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT