ADVERTISEMENT

மீதம் உள்ள மூன்று வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

11:59 AM Mar 17, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் 05.03.2021 அன்று கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

கொண்ட எச்.ராஜா - காரைக்குடி, எம்.ஆர்.காந்தி - நாகர்கோயில், அண்ணாமலை - அரவக்குறிச்சி, வானதி சீனிவாசன் - கோவை தெற்கு, குஷ்பூ - ஆயிரம்விளக்கு, சரவணன் - மதுரை வடக்கு, சி.கே.சரஸ்வதி - மொடக்குறிச்சி, கலிவரதன் - திருக்கோவிலூர், நாயனார் நாகேந்திரன் - திருநெல்வேலி, தணிகைவேல் - திருவண்ணாமலை, பி.ரமேஷ் - குளச்சல், குப்புராமு - ராமநாதபுரம், பூண்டி எஸ்.வெங்கடேசன் - திருவையாறு, வினோஜ்.பி.செல்வம் - துறைமுகம், விருதுநகர் - பாண்டுரங்கன், திட்டக்குடி - பெரியசாமி என பட்டியல் வெளியான நிலையில் மீதம் உள்ள மூன்று இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, நகேஷ்குமார் - தளி, ஆர்.ஜெயசீலன் - விளவங்கோடு, போஜராஜன் - உதகை என பட்டியல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT