ADVERTISEMENT

காங்கிரசிலிருந்து பாஜகவிற்கு மாறிய தலைவர்; ஆளுநர் பதவி கொடுக்க பாஜக முடிவு?

11:22 PM Jan 28, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவரை ஆளுநராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக செயல்பட்டவர். கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். தற்போது அமரீந்தர் சிங்கிற்கு ஆளுநர் பதவி வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்கள் முன் மெட்ரோ ரயில் திட்டத்தினை திறந்து வைக்க பிரதமர் மோடி மும்பை சென்றிருந்தார். இந்நிகழ்வில் ஆளுநர் பகத்சிங் கோஷியாவும் கலந்துகொண்டார். நிகழ்விற்குப் பின் ஆளுநர் பிரதமரைச் சந்தித்துப் பேசும்போது தன்னை ஆளுநர் பதவியிலிருந்து விடுவித்து விடும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தத் தகவல்கள் வெளியானதும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றன. இதனால் அமரீந்தர் சிங் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அமரீந்தர் சிங் பஞ்சாப் அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆளுநராக பொறுப்பேற்க தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT