ADVERTISEMENT

எதிர்க்கட்சிகளின் கூட்டம்; பாட்னாவில் குவிந்த தலைவர்கள்

09:46 AM Jun 23, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது தொடர்ந்து பேசி வந்தார்.

இதையடுத்து பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் பாட்னா சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்‌ஷ்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT