பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்புர் மாவட்டத்தில் பாரவூழி கிரமத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற திருமண விழாவில் இரவு விருந்து உண்ட நூறு உறவினர்கள் மயங்கி விழுந்ததால்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவம் அங்குள்ள பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/natural-home-remedies-for-food-poisoning-620x350.jpg)
இதுகுறித்து போலீசார்கூறியது, "விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட உணவானது முந்தய நாளே செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 80 நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 35 பேர் குணமாகி அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது மீதமுள்ளவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது."
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)