பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன்-1 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.

Advertisment

'One Nation, One Ration Card' scheme union minister

மத்திய அரசின் திட்டத்தால் குடும்ப அட்டைதாரர்கள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறமுடியும். 12 மாநிலங்களில் புத்தாண்டு முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment