ADVERTISEMENT

ஊரடங்கு நேரத்திலும் வேலை நடக்கிறதே? அழகர் வைகை ஆற்றில் இறங்குவார்... எதிர்பார்ப்பில் மதுரை மக்கள்!

01:33 PM Apr 10, 2020 | Anonymous (not verified)


எப்படிப் பார்த்தாலும் மே 7-ந் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதும், உலகப் பிரசித்திபெற்ற அத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதும் நடந்தே தீரும். அதற்குள் இந்தக் கரோனாவை உலகத்தைவிட்டே விரட்டிவிடுவாள் அன்னை மீனாட்சி என, பெரிதும் நம்பிக்கையோடு சொன்னார் அந்த அம்மன் பக்தர்.

"தினமும் ஆறுகால பூஜைகள் மீனாட்சியம்மன் கோவிலில் நடக்கின்றன. உலக நலனுக்காக, நாள்தோறும் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்யப்படுகிறது. இடர்கள் அனைத்தும் விலகுவதற்காக திருநீற்றுப்பதிகமும் பாடப்படுகிறது'' என்றார் பரவசத்துடன்.

ADVERTISEMENT



ரூ.354 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் நடந்துவந்த பணிகள் ஊரடங்கு உத்தரவால் முடங்கிவிட்டன. ஆனாலும், மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியே, கிழக்கு சித்திரை வீதியில் கல் பதிக்கின்ற சாலைப்பணி உட்பட சகலமும் தடைப்படாமல் நடக்கிறது.

‘ஊரடங்கு வேளையிலும், தவறாமல் வேலை நடக்கிறதே?’என்று அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் கேட்டோம். "இவங்க எல்லாருமே வடமாநிலத்துக் காரங்க கரோனாவுக்கு பயந்து நிறையபேரு சொந்த ஊருக்குப் போயிட்டாங்க. சித்திரை திருவிழா வருதுல்ல. மிச்சம் இருக்கிற ஆட்களை வச்சி வேலை வாங்குறோம்''’என்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜனோ, "கரோனா அச்சுறுத்தல் முற்றிலும் நீங்கி, 144 தடையுத்தரவெல்லாம் விலக்கப்பட்டு, முறையான அரசு அறிவிப்பு வெளிவந்த பிறகுதான், சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்'' என்கிறார்.

ADVERTISEMENT


‘மதுரை சித்திரை திருவிழா ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. கரோனா விரட்டப்பட்டு, மே 4-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும். 7-ந்தேதி, அழகர் வைகை ஆற்றில் இறங்குவார்’என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT