ADVERTISEMENT

இரண்டில் எது நடந்தாலும் வேட்புமனு வாபஸ்; வேட்பாளரை அறிவித்ததும் ஓபிஎஸ் ட்விஸ்ட்

06:26 PM Feb 01, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்போம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக இபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து தற்போது அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்போம். அவர்கள் வேட்பாளரை அறிவித்ததும் எங்களது வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொள்வோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுக இருந்தது. கடந்த தேர்தலில் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிடும் உரிமை உள்ளது. அந்த வகையில் பாஜக தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்தால் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

பாஜக போட்டியிடவில்லை எனில் செந்தில் முருகன் உறுதியாக போட்டியிடுவார். ஆனாலும் இரட்டை இலை முடங்குவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். பழனிசாமி தரப்பு என்னிடம் வந்து ‘பொது வேட்பாளரை’ நிறுத்துவது குறித்து கையொப்பம் கேட்டால் நான் கையெழுத்து இடுவேன். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை அதிமுகவிற்கு கிடைக்கவில்லை என்பதற்கு நான் காரணமில்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். அதே நிலை தான் இன்றைக்கும். அவர்கள் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் எனச் சொல்லி ஏ.எம்.பி ஃபார்மில் கையொப்பம் கேட்டால் உறுதியாக இரட்டை இலை சின்னத்திற்கு நான் கையெழுத்திடுவேன்” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT