ADVERTISEMENT

பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் குடும்பம் வேண்டாம்! - அதிமுக?

12:09 PM May 15, 2019 | Anonymous (not verified)

வரும் மே 19ஆம் தேதி தமிழகத்தில் அரவக்குறிச்சி,சூலூர்,திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அணைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலில் திமுகவை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்பு அதிமுகவை ஆதரித்து அதன் கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்தில் எடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அதிமுகவை ஆதரித்து அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் மருத்துவர் கண்காணிப்பில் சென்னையில் தன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் கட்சி பணிகளில், தன் மூத்த மகன், விஜய பிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த, நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவும், தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், விஜய பிரபாகரன் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அவரது பிரச்சாரத்தை அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.இதனால், நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு பிரசாரம் செய்ய, விஜய பிரபாகரனுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்ற தகவலும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விஜயகாந்த் குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக சார்பாக பிரேமலதா மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவருவதாக கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT